திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய காவலர் திரு.கொம்பையா அவர்கள் 10.12.2020-ம் தேதியன்று மானூர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியாக நின்றுக்கொண்டிருந்த வயதான மூதாட்டியிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவரால் பதில் எதுவும் கூற முடியாத அளவிற்கு சோர்வான நிலையில் இருந்ததை அறிந்து அவருக்கு உணவு அளித்து அவரது பசியை போக்கி உள்ளார். பின்னர் எனது ஊர் தாழையூத்து அருகே பால்கட்டளை என்று கூறியதையடுத்து காவலர் அப்பகுதியில் விசாரணை செய்த போது மூதாட்டியின் மகன் தேடி வருவதை அறிந்தார். காவலர் அவரது மகனிடம் தொடர்பு கொண்டு மூதாட்டியை அவரது வீட்டிற்கே அழைத்து சென்று குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். காவலரின் இத்தகைய செயல் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்