திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி (24.02.2023) கூடுதல் காவல் துறை இயக்குனர் அவர்கள் த. சி.கா 14 ம் அணி கவாத்தில் கலந்து கொண்டு காவல் ஆளிநர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மிக முக்கியமாக இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுடன் வலியுறுத்தி பணியில் இருக்கும் போது விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்கியும் மேலும் திரு.ராஜேந்திரன் உதவி தளவாய் 1 சுமார் 41 ஆண்டுகள் 41 நாட்கள் பணிபுரிந்து (28.02.2023) உதவி தளவாய் 2 திரு.சதாசிவம், 37 ஆண்டுகள் 8 மாதங்கள் பணிபுரிந்து (28.02.2023) ஆம் தேதி அன்று வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வில் செல்ல இருப்பதால் அவர்களின் காவல் பணிகளை பாராட்டி அவர்களுக்கு பொன்னாடை கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பித்துள்ளார்கள். மேலும் அணியில் புதிய நூலக கட்டிடத்தையும் 100 மரக்கன்றுகள் நட்டும் மற்றும் காவல் ஆளிநர்கள் உணவு அருந்தும் உணவு விடுதி கூடம் புதிதாக திறந்து வைத்துள்ளார்கள். மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நூலகத்தில் பணி புரியும் பணியாளருடன் கலந்துரையாடி கவாத்து மைதானத்தில் சுமார் ஒரு மணி 30 நிமிடம் வரை காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி குறிப்பாக வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணிவது மது மாது சூது போன்ற தீய பழக்கங்கள் இன்றி நல்ல முறையில் செயல்படவும் ஆன்லைன் ரம்மி கேம்ஸ் ஷேர் மார்க்கெட் போன்று செயல்களில் ஈடுபடாமளும் பணி ஓய்வு நேரத்தின் போது படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும்பணியின் போது கவனமுடன் பணிபுரிய அறிவுரைகள் வழங்கி உள்ளார்கள் . மேலும் காவல் ஆளுநர்கள் அதிகாரிகள் ஆகியோர்களிடம் குறைகளை கேட்டறிந்துள்ளார்கள் இது காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் மத்தியில் ஓர் உயர் அதிகாரி நம்மிடம் இவ்வளவு நெருக்கமாக அருகில் வந்து பழகி அறிவுரைகள் வழங்குவதை கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் என்று காவல்தறையினர் பெருமையுடன் தெரிவித்துக்கொண்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்