திருவாரூர்:திருவாரூர் உட்கோட்ட காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc., (Agri)., அவர்கள் இன்று (03.08.2024) நேரில் சென்று பார்வையிட்டு கவாத்து பயிற்சி குறித்து அறிவுரைகள் வழங்கினார்கள்.
திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கப்பட்ட “மகிழ்ச்சி” திட்டம் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்து, அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தினார்கள்.
காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
மேலும், இருசக்கர வாகனம் ஓட்டும் போது அனைவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
கவாத்து பயிற்சியின் போது அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள்.
அப்போது, திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.மணிகண்டன் அவர்கள் மற்றும் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.காயத்திரி அவர்களும் உடனிருந்தார்கள்.