திருவாரூர் : (09.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் நன்னிலம் நல்லமாங்குடி தங்கம் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நன்னிலம் பகுதி, நல்லமாங்குடி தங்கம் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் மூலம் பரிசுகள் விழுந்துள்ளது என்ற போலி செய்திகள் மற்றும் பெருகி வரும் சைபர் குற்றங்கள், இணையவழி விளையாட்டு மூலம் நடைபெறும் குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும், சைபர் கிரைம் சம்பந்தமாக சமூக வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக கையாளுவது என்பது குறித்தும், அறிமுகம் இல்லாத முகம் தெரியாத நபர்கள் இணையத்திலோ, செல்போனிலோ உங்களது சுய விபரங்களை கேட்டால் சொல்ல கூடாது என்றும், இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது கவனமாக வாங்குவது குறித்தும், இணையத்தை பாதுகாப்பாக கையாளுவது குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டதாக அறிந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in -ல் புகார் அளிக்குமாறு பொதுமக்களிடம், துண்டு பிரசுரங்கள் வழங்கி திருவாரூர் மாவட்ட சைபர்vரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.