வேலூர் : காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஜி ராவ் நகர் பகுதியில் 918.12.2022), இரவு இரண்டு சக்கர வாகனத்தில் தனது கணவருடன் சென்று கொண்டிருந்த பெண்ணின் கையில் இருந்த செல்போனை இரண்டு இளைஞர்கள் பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
இது சம்பந்தமாக அப்பெண் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் (19.12.2022) தேதி காட்பாடி போலீசார் அப்பகுதியில் இருந்த CCTV காட்சிகளின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்த போது, அவர்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு பணம் தர வேண்டும் என்றும் அதற்காக செல்போனை பறித்ததாக தன் தவறை ஒப்புக்கொண்டும் செல்போனை காவல்துறையிடம் பத்திரமாக கொடுத்துவிட்டனர்.
இரண்டு இளைஞர்களில் ஒருவர் பள்ளிக்கூடமும் ஒருவர் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் என்பதால் மனுதாரர் இளைஞர்கள் மீது எவ்வித மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதன் பேரிலும் காவல்துறை விசாரணையில் அவர்கள் தெரியாமல் செய்ததாக என தெரிய வந்ததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் அந்த இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தையும் கருதி இவர்கள் சிறை சென்றால் உள்ளிருக்கும் சில விஷமிகளுடன் தொடர்பு கொண்டு மேலும் சில தீய பழக்கங்களை கற்றுக் கொள்ள வாய்ப்புகள் இருப்பதால் காவல்துறை என்பது ஒருவர் செய்யும் தவறுக்கு தண்டனை பெற்றுத் தருவது மட்டுமின்றி, அவர்களை எவ்வித தீய பழக்க வழக்கங்களையும் செய்யாமல் நல்வழிப்படுத்துவது என்ற எண்ணத்தில் இளைஞர்களை இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அவர்களின் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்க உத்தரவிட்டதின் பெயரில் அந்த இளைஞர்களை பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்