திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் கிராமப்புற மக்களின் உயிராதாரமான ஆரணி ஆற்றில் பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடை & மனித மலக் கழிவுநீர் கலக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொன்னேரி டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னேரி வட்டத்தின் உயிர் ஆதாராமான ஆரணி நதியில் நகர மனித மலக் கழிவுநீரை கலந்து,மக்கள் வாழ்வை சிதைக்க வேண்டாம் எனவும், 20-க்கும் மேற்பட்ட கிராமங்களையும், பல்லாயிரம் ஏக்கர் விளை நிலைங்களையும் பொட்டல் காடாக்கி சுற்றுசூழல் கேடு செய்யவேண்டாம் எனவும் குடிநீர், விவசாயம் ,பல்லுயிர் பாதுகாப்பு, கால்நடை, இயற்கை வளம் நிலவளம், நிலத்தடிநீர் உள்ளிட்ட வாழ்வாதாரமான நதியை சாக்கடை ஆக்க வேண்டாம், பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றுவழி உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆலாடு, தேவாரஞ்சேரி, ஏறுசிவன், இலட்சுமிபுரம், மத்திராவேடு, பெரும்பேடு, கம்மவார்பாளையம், அரவாக்கம், லிங்கபையன்பேட்டை, கண்டிகை, அ.ரெட்டிப்பாளையம். கொளத்தூர், மனோபுரம், பூதூர், வேலூர், சோமஞ்சேரி, அத்தமனஞ்சேரி, காட்டூர், தத்தமஞ்சி, வஞ்சிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.
ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் அ.வினோத் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கண்டன கோஷங்களுக்கு பிறகு மக்கள் கருத்து கேட்டு மாற்று திட்டம் உருவாக்க வேண்டும். இல்லையெனில் ஆரணி ஆற்றங்கரை இருபுறம் உள்ள கிராமங்களில் கருப்பு கொடி ஏந்தி போராட இருப்பதாக போராட்டக்காரர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு