தேனி: உத்தமபாளையம் அருகே கள்ள நோட்டுகளுடன் ஒரு கும்பல் சுற்றித் திரிவதாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உத்தமபாளையம் டி.எஸ்.பி உமாதேவி உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் திரு.மாயன், சிறப்பு எஸ்.ஐ. திரு.மணிகண்டன், ஏட்டுக்கள் திருஅழகுதுரை, திரு.சுந்தரபாண்டி தலைமையில் போலீசார்ரோந்து சென்றனர்.
இரண்டு பேர் சந்தேகப்படும்படி நின்றிருந்தனர். மர்ம நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
மறைத்து வைத்திருந்த பையை சோதனை செய்தபோது பையில் ரூ.2000, 500, 100 ரூபாய்கள்ளநோட்டு கட்டு கட்டாக இருந்ததைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணை செய்ததில் கண்ணன் 42 என்றும் கம்பத்தில் இவர் ஆட்டோ டிரைவராக இருந்ததும்,
இதேபோல், சென்னை செல்லும் ஆம்னி பஸ்சில் டிரைவராக வேலை செய்த அலெக்ஸாண்டர் 43 என தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்