ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில் கல்லசாராயம் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, இன்று ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. கீதா அவர்களின் தலைமையில், நான்கு காவல் ஆய்வாளர்கள் 20 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 90 காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
ரத்தனகிரி மற்றும் திமிர் காவல் எல்லைக்குட்பட்ட சாம்ப சிவபுரம் காவனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டன அதில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுவந்த மணிகண்டன், பசுபதி, தக்ஷிணாமூர்த்தி, சந்திரபாபு, ஞானசேகரன், பச்சையப்பன், கஜேந்திரன், பிரபு, சிலம்பரசன் ஆகியோர் கைது செய்து அவர்களிடம் இருந்த 600 லிட்டர் சாராயம் மற்றும் ஊழல்கள் பறிமுதல் செய்து அளிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவிக்கையில் கள்ளச்சாராய தொழில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் கல்லசாராயம் விற்பவர்கள் மற்றும் காய்ச்சுபவர்கள் யாரேனும், திருந்தி வாழ முன்வந்தால் அவர்களுக்கு, அனைத்து உதவிகளும் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்