திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விருப்பாட்சி தலகுத்து வனப்பகுதி தோட்டத்து சாலையில் கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சத்திரப்பட்டி காவல் ஆய்வாளர் திருமதி.லட்சுமி பிரபா மற்றும் போலீசார் விருப்பாச்சி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விருப்பாட்சி தலகுத்து வனப்பகுதி தோட்டத்து சாலையில் கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த ராமகிருஷ்ணன்,30, முருகன் 45,செந்தில் கணேஷ்38,ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் கள்ளத்துப்பாக்கி வைத்துக்கொண்டு வன விலங்குகளை வேட்டையாடுவது தெரியவந்தது. இதையடுத்து சத்திரப்பட்டி போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த கள்ளத் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.