இலங்கையிலிருந்து கள்ளதோணி மூலமாக மதுரைக்கு வந்து போலியான ஆவணங்கள் மூலம் வெளிநாடு தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த 23பேருக்கு உதவியதாக மதுரை ரயிலார்நகர் பகுதியை சேர்ந்த தினகரன் என்பவரை கியூ பிரிவு போலிசார் கைது செய்தனர்.
தினகரனின் மகன் அசோக் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர். இந்நிலையில் மதுரையில் கைது செய்யப்பட்டமுக்கிய குற்றவாளி தினகரன் பழனியில் உள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீசாரால் கைதுசெய்யப்பட்டு பழனி சிறையில் அடைக்கப்பட்ட தினகரன் இலங்கையை சேர்ந்த பிரபல தாதா அங்கொடோ லொக்கா உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகாமிசுந்தரியின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.