திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், நவாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 1) சின்னப்பையன் வ/39 த/பெ ஆரிமுத்து மற்றும் 2)தங்கராஜ் 47. ஆகிய இரண்டு நபர்களும் நவ்வாப்பாளையம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக போளூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.R.கவிதா அவர்கள் வழக்குபதிவு செய்து மேற்கண்ட இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 107 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.