தமிழக காவல்துறையில் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 1. திருமதி. மகுடீஸ்வரி¸ காவல் ஆய்வாளர்¸ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு¸ புனித தோமையார்மலை¸ தெற்கு மண்டலம்¸ சென்னை¸ 2. திருமதி. லதா¸ காவல் ஆய்வாளர்¸ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு¸ முசிறி-துறையூர்¸ திருச்சி மாவட்டம்¸ 3. திரு. செல்வராஜ்¸ காவல் உதவி ஆய்வாளர்¸ மத்திய புலனாய்வு பிரிவு¸ சேலம் மண்டலம்¸ 4. திரு. சண்முகநாதன்¸ தலைமை காவலர் 731¸ திருவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையம் (அயல்பணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு)¸ விருதுநகர் மாவட்டம்¸ 5. திரு. ராஜசேகரன்¸ தலைமை காவலர் 1420¸ கீழ்கொடுங்காலூர் காவல் நிலையம் (அயல்பணி மத்திய புலனாய்வு பிரிவு) திருவண்ணாமலை மாவட்டம் ஆகியோருக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி. K. பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இவ்விருது 2021ம் ஆண்டு குடியரசு தின விழாவன்று வழங்கப்படவுள்ளது.