வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராய தயாரித்தல் (ம) விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேல்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. பிரபாகரன் அவர்களின் தலைமையில் போலீசார் குடியாத்தம் ரெட்டி மாங்ககுப்பம் ஆற்றங்கரை ஓரம் சோதனை செய்தபோது எதிரி சிவகுமார் 60. என்பவர் விற்பனைக்கு செய்ய வைத்திருந்த சுமார் 60 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.