வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் (ம) விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் (18.11.2022)-ம் தேதி வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள உட்கோட்டங்களில் கள்ளச்சாராயம் சோதனை நடத்தியதில் வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. திருநாவுக்கரசு, அவர்களின் தலைமையிலான போலீசார் சோதனை செய்ததில் சுமார் 1100 லிட்டர் கள்ளச்சாராயமும் 2500 லிட்டர் ஊறல்
(F/W) , காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பழனி அவர்களின் தலைமையில் போலீசார் சோதனை செய்ததில் சுமார் 15 லிட்டர் கள்ளச்சாராயம் 100 லிட்டர் ஊறல் ( F/W) மற்றும் குடியாத்தம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ராமமூர்த்தி அவர்களின் தலைமையிலான போலீசார் சோதனை செய்ததில் சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராயணமும் 7500 லிட்டர் ஊறல் (F/W) என மொத்தம் சுமார் 1615 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் 10, 100 லிட்டர் ஊறல் ( F/W) அழித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்