தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை உட்கோட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேலபழஞ்சுர் பகுதியில் வசித்து வரும் லைனல் ராஜசேகரன் என்பவரது வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி பட்டுக்கோட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.முருகேசன் அவர்கள் தலைமையிலான காவலர்கள் மேற்படி இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டதில் கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த உபகரணங்கள், 40 litre F wash மற்றும் 2 Titre TD Arrack ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளியான லைனல்ராஜசேகரன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.