பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை, காய்ச்சுதல், கடத்தல் மற்றும் போலி மதுபானம் விற்பனை, கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் நடைபெறாவண்ணம் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுப்படுவோர் குறித்த தகவல்களை பொதுமக்கள் வாட்ஸ்அப் – 6374111389 என்ற எண்ணிலும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணாண 10581 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தருவோரின் பெயர், விபரம் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச. மணி தெரிவித்துள்ளார்.