திருவள்ளூர்: திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கோரோனோ நோய்தொற்று வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக நான்கு மாவட்டங்களில் நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.
இந்த நிலையில் சோழவரம் இப்பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆய்வு மேற்கொண்டார். இப்போது உரிய அனுமதியின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற நான்கு சக்கர வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இதேபோன்று தேவை இன்றி இரு சக்கர வாகனங்களில் வந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன்,IPS இ பாஸ் இன்றி மாவட்டத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பப்படும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ தேவைகளுக்கு மட்டும் உரிய அனுமதி பெற்று வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், சென்னையிலிருந்து மதுபாட்டில்கள் வாங்குவதற்காக வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாக என்று டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்துமீறி கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடும் மதுபானக்கடை ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் எச்சரித்துள்ளார். அவருடன் பொன்னேரி ஏஎஸ்பி திரு.பவன்குமார், IPS மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்