தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான கீரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவர் மளிகை கடை முன்பு சந்தேகிக்கும் படியாக பிளாஸ்டிக் பையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் சோதனை செய்தபோது கள்ளச்சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து சிவராஜ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.