தென்காசி: தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
. இந்நிலையில் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையாலுருட்டியில் மயில்ராஜ்(40) மற்றும் சாமி சங்கர்(56) ஆகியோர் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான கருவேலம்பட்டை போன்ற பொருட்களை வைத்திருப்பதாக
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததில் மயில்ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து மேற்படி கடையாலுருட்டியைச் சேர்ந்த தங்கமணி
என்பவரின் மகன் மயில்ராஜ்(40), தங்கசாமி என்பவரின் மகன் சாமி சங்கர் (55) மற்றும் சாம்பவர் வடகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் ஈஸ்வரன் (56) ஆகியோர் சேர்ந்து கள்ளசாராயம் காய்ச்சுவதாக கூறியதன் பேரில்
சேர்ந்தமரம் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது சுமார் 70 லிட்டர் கள்ளசாராய ஊறல் வைத்திருப்பது தெரியவந்தது.. இதுகுறித்து மேற்படி மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்