கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வடக்குமண்டல காவல்துறை தலைவர் அவர்கள் வாருடாந்திர ஆய்வு
இன்று 24.02.2022 -ந் தேதி வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சந்தோஷ்குமார் IPS, அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட மாவட்ட காவல் அலுவலத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டார் அப்போது மாவட்ட காவல் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை பார்வையிட்டார், பின்பு மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு அலுவலகங்களை பார்வையிட்டு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவஹர்லால், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட காவல் அலுவலர்கள் உடனிருந்தனர்.