திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2020/2021ம் வருடத்தில் காவல் நிலைங்களில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க சைபர் கிரைம் காவல் நிலையத்தின் மூலம் அதிரடி விசாரணை செய்து காணாமல் போன ரூ 5.5 லட்சம் மதிப்புள்ள 50 ஆன்ராய்டு வகை செல்போன்களை மீட்டு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சம்மந்தப்பட்ட செல்போன் உரிமையாளர்களை (மனுதார்கள்) இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்கள்.
செல்போன்களை பெற்றுக்கொண்ட அனைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2020/2021-ம் ஆண்டில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக புகார் மனுக்களில் துரித விசாரணை நடத்தி 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள புகார் மனுக்கள் மீது தனிப்படையினர் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினர் மற்றும் சைபர் கிரைம் காவல் அதிகாரிகள் & அலுவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி வெகுமதி வழங்கினார்கள்.