தஞ்சை : தஞ்சை மாவட்டம் பகுதிகளில் வழக்கு நிலுவையில் உள்ள தேடப்பட்டு வரும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை உடனடியாக கைது செய்ய தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஆசிஷ்ராவத் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் பாபநாசம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி. பூரணி அவர்களின் மேற்பார்வையில் பாபநாசம் உட்கோட்ட போலீசார் தீவிர கண்காணிப்பும், வாகன சோதனைகளும் மேற்கொண்டு வந்தார்கள்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் உட்கோட்டம் கபிஸ்தலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உமையாள்புரம் அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சில வாரங்களுக்கு முன் கைக்குழந்தையுடன் வந்த ஒரு தம்பதியினர் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடி சென்றதாக வந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி பூரணி அவர்கள் மேற்படி குற்றவாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. முத்துக்குமார் உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ் குமார் மற்றும் தலைமை காவலர் திரு. பிரபு மற்றும் காவலர்கள் திரு. விஜயகுமார் ,சந்தோஷ் மற்றும் பிரபாகர் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் எண்களை ஆராய்ந்து வந்த நிலையில் மேற்படி திருட்டில் சம்பந்தப்பட்ட நபர் கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியை சேர்ந்த மருதவீரன் மகன் சிவசுப்பிரமணியன் (34) என்பதும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் திருச்சி , கரூர் , அரியலூர் , தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நிலுவையில் இருந்து வருகின்றன என்பது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து பாபநாசம் தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதலில் மேற்படி நபர் திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோயில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாக (22-8-2023) நேற்று ரகசிய தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அந்நபரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தார்கள்.
மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்நபர் தான் பகல் நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத கோயில் மற்றும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு அங்கு பூட்டை உடைத்து திருடுவேன் என்று கூறினார்.
மேற்படி நபரையும் ,அவரிடம் இருந்த கைப்பற்றப்பட்ட சுமார் பத்து சவரன் நகைகளையும் நேற்று கபிஸ்தலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது அதனை தொடர்ந்து இன்று (23-8-2023) அந்நபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உயர்திரு நீதியரசர் உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்

குடந்தை-ப-சரவணன்