மதுரை : மதுரை NDPS நீதிமன்ற உத்தரவுபடி, திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் திரு. ரூபேஷ்குமார் மீனா.IPS., அவர்கள் தலைமையிலான தென் மண்டல போதைப்பொருள் ஒழிப்புக் குழுவின் மேற்பார்வையிலும், தென் மண்டல காவல்துறை தலைவர் திரு. அஸ்ரா கார்க்.IPS., அவர்கள் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் திருச்சுழியில் உள்ள ராம்கி எனர்ஜி லிமிடெட்டில் 963 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.மதுரை மாவட்டத்தில், 2022ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 8 என்டிபிஎஸ் வழக்குகளுக்கு அழித்தல் உத்தரவு பெறப்பட்டு, Drug Disposal Committee- யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கூடுதல் காவல்துறை இயக்குநர், (குற்றம்) திரு மகேஷ் குமார் அகர்வால்.IPS., அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். மதுரை சரக காவல் துணை தலைவர் திருமதி.பொன்னி.IPS., அவர்கள், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மனோகர்.IPS., மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத்.IPS., மற்றும் அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு. வருண்குமார்.IPS., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி