தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுகளில் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகையாக ரூபாய் 25,000/- வரை வழங்கப்படும். அதன்படி 2021 – 2022ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளின் உயர்கல்விக்கான சிறப்பு கல்வி உதவி தொகைக்கான காசோலை மற்றும் வரைவோலைகளை இன்று (14.03.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கினார். இந்த கல்வி உதவி தொகையை தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிவரும் தட்டார்மடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் மகன் ஜெயவிக்னேஷ், கோவில்பட்டி போக்குவரத்துபிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன் மகள் ஆர்த்தி, மாவட்ட குற்ற ஆவண காப்பக தலைமைக் காவலர் திரு. முத்துகிருஷ்ணன் மகள் அங்காளபரமேஸ்வரி, காவல்துறை அமைச்சுப்பணி உதவியாளர் திருமதி. கிருஷ்ணம்மாள் மகள் லதாசுப்ரியா ஆகியோருக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கினார்.