கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன், இ.கா.ப அவர்கள், கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கல்வராயன்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகிராமங்களில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடி பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 சிறப்பு படைகள் அமைத்து கல்வராயன் மலைமுழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊரல்களை அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன்படி (20.11.2022)- ந் தேதி காவல் ஆய்வாளர்கள் திரு.ரவிச்சந்திரன், திரு.மூர்த்தி மற்றும் திரு.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கல்வராயன்மலை முழுவதும் அதிகாலை முதல் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டுவந்தனர், அப்போது வாழப்பாடி, ஓடைப்பாடி, தாழ்வாழப்பாடி, மேற்கு ஓடை மற்றும் கன்னிமாத்து ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 17 சின்டக்ஸ் டேங்கில் சுமார் 3400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டது.
மேலும் சின்னசேலம் காவல் நிலையம் மற்றும் கீழ்குப்பம் காவல் நிலைய பகுதியில் உதவி ஆய்வாளர் திரு.மியாடிட் மனோ, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.தனசேகர் மற்றும் தனிப்படை போலிசார் சோதனை செய்ததில் அமையாகரம் பேருந்து நிலையம் அருகே TN 20 X 3566 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் சாராயம் விற்ற அமையாகரம் கிராமத்தைச் சேர்ந்த 1) பச்சமுத்து(38) த/பெ முத்துசாமி என்பவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடமிருந்து 07 லிட்டர் சாராயம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது, உதவி ஆய்வாளர் திரு.ஏழுமலை மற்றும் தனிப்படை போலிசார் கச்சிராயபாளையம் காவல் நிலைய பகுதியில் சாராயம் விற்ற 2) அலெக்ஸ் பாண்டியன்(29) த/ கண்ணன் கரடி சித்தூர் மற்றும் 3) தங்கராஜ் (62) பூண்டி காவுண்டர் பரங்கிநத்தம் என்பவர்களை கைது செய்து, அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது, உதவி ஆய்வாளர் திரு.நரசிம்மஜோதி மற்றும் தனிப்படை போலிசார் சங்கராபுரம் காவல் நிலைய பகுதியில் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் மோட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 4) கார்த்திக் (42) த/பெ பெரியசாமி மற்றும் 5) விஜயகாந்த்(30) த/பெ முத்துசாமி ஆகியோர்கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இக்குற்றச்செயல்களில் ஈடுப்பட்ட 5 குற்றவாளிகளும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.