விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மொட்டமலை அருகே தனியாருக்கு சொந்தமான நர்சிங் காலேஜ் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் முதலாமாண்டு நர்சிங் படிப்பதற்காக சிவகாசி நாரணாபுரம் பகுதியைச் சீனிவாசன் திலகவதி தம்பதியின் மகள் கெளசல்யா 18 நாளை கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் நேற்று கல்லூரியில் சேர்ந்த பின் மாணவி கெளசல்யா, இராஜபாளையம் அடுத்துள்ள விஷ்னுநகர் பகுதியில் உள்ள கல்லூரியின் விடுதியில் நேற்று இரவு தங்கி உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை கௌசல்யாவின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உங்களுடைய மகள் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர் .
பெற்றோர் மருத்துவமனையில் வந்து பார்த்த பொழுது உங்கள் மகள் இறந்து விட்டதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. நேற்று கல்லூரி விடுதியில் சேர்ந்த மாணவி இன்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் இதுகுறித்து பெற்றோர்கள் கூறும் பொழுது தங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை கிடையாது தற்கொலை செய்து கொள்வதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை இந்த சாவில் மர்மம் இருப்பதாக உண்மை நிலைவரத்தை காவல்துறை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர் .
காவல்துறை கௌசல்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராஜபாளையம் அரசு மருத்துமனையில் வைத்துள்ளனர் மேலும், இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் மாணவி தற்கொலை தான் செய்து கொண்டார, அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்