சேலம்: சேலம் மாவட்டம் அம்மா பாளையத்தை சேர்ந்தவர் கவிபாரதி 20. கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். கல்லூரி பஸ் ஸ்டாப்பில் பஸ்சில் இருந்து இறங்கும் போது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை காணவில்லை.
யாரோ பஸ்சினுள் திருடி விட்டனர். இதுகுறித்து கவிபாரதி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.