தேனி: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இயங்கி வரும், ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு தேனி மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திருமதி.பாக்கியம் அவர்கள் தலைமையில் காவலர் திரு.பூபதிராஜா ஆகியோர்கள் கல்லூரி மாணவிகளை நேரில் சந்தித்து பெண்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், வங்கி கணக்கு ரகசிய எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
மேலும் தங்களுக்கும் தங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் ஏற்படும் சைபர் கிரைம் தொடர்பான பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்றும்
மாணவிகளாகிய நீங்கள் கற்றுக்கொண்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான விழிப்புணர்வை தங்களது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று கூறி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.