கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் திரு.வி. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், அவர்கள் தமிழக காவல்துறையில் முன்மாதிரி திட்டமாக கல்லூரிகளில், பயிலும் மாணவியர்களின் நலன் கருதி ”போலீஸ் அக்கா” என்ற தலைப்பில் கோவை மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடுவது, அவ்வப்போது பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு மாணவியர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான, பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்கள் போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்டு அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவைக்க புதிய திட்டம் தொடங்கபட்டுள்ளது.
பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பது கல்லூரி மாணவியர்களுக்கு நல்ல சகோதரியாக போலீஸ் அக்காவாக செயல்பட்டு அவர்கள் கொடுக்கும் தகவல்களை ரகசியமாக பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்ளும் இத்திட்டத்தை (18/10/2022),-ம் தேதி காவல் ஆணையர் அவர்களால், காவல் ஆணையர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் திருமதி.சுகாசினி, அவர்கள் உட்பட கோவை மாநகரத்தில், உள்ள 60 கல்லூரி நிர்வாகிகள் மற்றும் 37 பெண் காவலர்கள் போலீஸ் அக்காக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்