சேலம் : சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு சைபர் கிரைம் குற்றத்தடுப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சேலம் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து இன்று ஊரக உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.தையல்நாயகி அவர்கள், தலைமையில் மூன்று கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து 2500 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சேலம் மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த பெண் காவலர்கள் மைம்ஸ் மூலம் நடத்தி காட்டிய சைபர் கிரைம் விழிப்புணர்வு கலந்து கொண்டோர்களை வெகுவாக கவர்ந்தது மேற்படி நிகழ்ச்சிகளில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவகுமார் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள நல்லிணக்கம் நாடி என்ற தலைப்பில் திருமதி.தையல்நாயகி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்