இராமநாதபுரம்: சைபர் குற்றங்களை தடுக்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனைதொடர்ந்து, 02.03.2021-ம்தேதி சைபர் கிரைம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.வெற்றிவேல்ராஜன் அவர்கள் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆன்லைன் மூலம் நடைபெறும் பண மோசடிகள், சமூக வலைதளங்களை பாதுகாப்புடன் கையாளும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.