கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 21 ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு லட்சியம், படிப்பு, விளையாட்டு, ஒழுக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும் மாணவ மாணவியர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஒட்டுவது, செல்போன், போதை வஸ்த்துக்கள் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும் வாடஸ்அப், ஃபேஸ்புக், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், அதனை காவல் துறை கையாளும் விதம்பற்றியும் எடுத்து கூறி மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், வழங்கினார். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கென தமிழக காவல் துறையால் உருவாக்கப்பட்ட காவலன் செயலி ( SOS App ) பற்றியும் நன்கு விளக்கி சொல்லப்பட்டது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்