மதுரை : மதுரை அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலியானதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை அருகே கூத்தியார்குண்டு கருவேலம்பட்டியைசேர்ந்தவர் பாண்டி மகன் பால்பாண்டி 21. இவர் மதுரையில் கோரிப்பாளையத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மூன்று தினங்களுக்கு முன்பு கீழஉரப்பனூர் இந்திரா காலனியில் உள்ள அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தார் .அங்கு கம்ப்ரசர் மோட்டார் அருகே சென்றபோது கசிவினால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார் .இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி