செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் உள்ளே தனியார் கல்லூரி மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் சோதனைகள் ஈடுபட்டனர். அப்பொழுது 30க்கு மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. மேலும் கல்லூரியை சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் போலீசார் சோதனை இட்ட பொழுது, போதை மாத்திரைகள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்