சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகர் ஆனந்தா கல்லூரியில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜான் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக
டி.எஸ்.பி பார்த்திபன் பங்கேற்று மாணவர்களிடையே போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்துபோதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிவேன், போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேற அருக்க அரசுக்கு துணை நிற்பேன் மாநிலத்தில் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கொள்கிறேன் என போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்லூரியின் செயலர் செபஸ்டியன் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் பாண்டியன் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு துறை காவலர் செந்தில்கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள்
கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி