திருவாரூர் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் இன்று (11.01.2024) நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri), அவர்கள் கலந்து கொண்டார்கள். தமிழக பண்பாடு மற்றும் பாரம்பரிய முறையை மீட்டெடுக்கும் வகையில் மண்பானையில் பொங்கலிட்டு வழிபாடு செய்யப்பட்டது. மேலும், கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் கலை நிகழ்சிகள் நடைபெற்றது. அப்போது நடந்த உரியடி நிகழ்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri), அவர்கள் கலந்து கொண்டு உரியடி பனையை உடைத்தார்கள். இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் திரு.வெங்கட்ராஜ்லு, கல்லூரியின் இயக்குனர் திரு.விஜயசுந்தரம் மற்றும் கல்லூரியின் முதல்வர் திரு. சிவகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.