திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி (தன்னாட்சி) உள்ளது.இக்கல்லூரி உள்ள திருவள்ளுவர் அரங்கில் நேற்று பட்டமேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி முதல்வர் முனைவர் ம.ச. தில்லைநாயகி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் கா.சொர்ண முத்துராஜ் பட்டமேற்பு விழா அறிக்கையை வாசித்தார். சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி முதல்வர் முனைவர் க.சிவகுமாரி விழா பேருரை நிகழ்த்தினார். துறைத்தலைவர்கள் பட்டம் ஏற்பு மாணவர்களை அறிமுகம் செய்தனர். இதனையடுத்து நிகழ்ச்சியில் 959 மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு