தஞ்சாவூர்: கும்பகோணம் ஊர்காவல் படை ஆளிநர்கள், அலுவலர்கள் மற்றும் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையினர் ஒன்றிணைந்து (04.01.2025) கும்பகோணம் அருள்மிகு காசி விசுவநாதர் சுவாமி திருக்கோயில் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தின் உயர்திரு மண்டல தளபதி U.ரமேஷ் பாபு அவர்கள், தலைமையிலும் கும்பகோணம் ஊர் காவல் படை படைத்தளபதி திரு. T.B. ரவி அவர்கள் மற்றும் எழுத்தர் திரு. ராமச்சந்திரன், அன்னை கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் வெங்கடேசன் மற்றும் முனைவர் ஜெகன் அன்டோ திலக் முன்னிலையிலும் உழவாரப்பணி சிறப்பாக நடைபெற்றது. கோவில் நிர்வாக குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தனர். திரு. K. சுந்தர ராஜன் செயல் அலுவலர், ஊர்காவல் படையினருக்கும், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கும், தேசிய மாணவ படையினருக்கும் நன்றி பாராட்டினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்