மதுரை: சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் அகத்திர உறுதி மையம், தேசிய மாணவர் படை, நாட்டு நல பணி திட்டம், இளைஞர் செஞ்சுரிவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்த ஆண்டினை கொண்டாடும் விதத்தில் தீ பாதுகாப்பு மற்றும் தடுப்பு மாதிரி ஒத்திகை பயிற்சி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமாக கல்லூரி மைதானத்தில் செய்து காட்டப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யமானந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சோழவந்தான் தீயணைப்பு துறையின் தலைமை அதிகாரி கண்ணன் மாணவர்களிடையே தீ பாதுகாப்பு மற்றும் தடுப்பு மாதிரி ஒத்திகை பயிற்சியினை விளக்கிப் பேசினார். சோழவந்தான் தீயணைப்பு துறை காவலர்கள், கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் அசோக்குமார், முனைவர் ரமேஷ்குமார், ரகு, முனைவர் ராஜ்குமார், மற்றும் முனைவர் தினகரன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் ராஜேந்திரன் நன்றியுரை ஆற்றினார்.நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜ்குமார் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி