அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. தீபக் சிவாச் I.P.S., அவர்கள் உத்தரவின்பேரில் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு 23.01.2025 இன்று அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரியலூர் நகர போக்குவரத்துக் காவல் துறையினர் சார்பில் ஓவிய போட்டி, பேச்சுப்போட்டி,நடன போட்டி, இசைப்போட்டி மற்றும் நாடக போட்டி முதலியவை நடைபெற்றன. கல்லூரி மாணவ மாணவிகள் பலர் இப்போட்டிகளில் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்வின் போது அரியலூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.அஜித் குமார் அவர்கள் கல்லூரி நிர்வாக அலுவலர்கள் முன்னிலை வகித்தார்கள். ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று ஜெயங்கொண்டம் நகர காவல் ஆய்வாளர் திரு. மதிவாணன் அவர்கள் தத்தனூர் எம் ஆர் சி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். நிகழ்வின் போது கல்லூரி ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.