திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ண குமார்,இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம், தெக்ஷணமாற நாடார் சங்கம் கல்லூரி மற்றும் வள்ளியூர், யூனிவர்சல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகன், பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், வங்கிக் கணக்குகளின் இரகசிய எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதிருப்பது, முகாந்திரம் இல்லாமல் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் மோசடி சம்பந்தமான புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண் 1930 மற்றும் (http://cybercrime.gov.in) இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















