விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை திண்டிவனம் உட்கோட்டம் பிரம்மதேசம் காவல் நிலையம் கல்குவாரி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின், உத்தரவின் பேரில் திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் பாண்டியன் அவர்களின், அறிவுறுத்துதலின் பேரில் பிரம்மதேசம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரகாஷ் அவர்களின், தலைமையில் 50க்கும் மேற்பட்ட கல்குவாரி உரிமையாளர்களை ஒன்று திரட்டி காவல்துறை சார்பாக இன்று விழிப்புணர்வு கூட்டம் திண்டிவனம் ஐஸ்வர்யா மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாடிய ஆய்வாளர் அவர்கள், அனைத்து கல்குவாரிகளிலும் உள்ள வெடி மருந்துகளை அவ்வப்போது தணிக்கை செய்யவும், கல்குவாரிகளில் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தவும், வெடி மருந்துகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் லாரி உரிமையாளர்களிடம் ஜல்லிகளை எடுத்துச் செல்லும் போது தார்பாய்கள் மூடி எடுத்துச் செல்லவும், லாரிகளை அதிவேகமாக இயக்கக் கூடாது என்றும் குடிபோதை மற்றும் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் விதிகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டது.