அரியலூர் : தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.ராஜேஷ்தாஸ் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, காவல்துறை தலைவர் H.M.ஜெயராம் இ.கா.ப (மத்திய மண்டலம்) மற்றும் காவல்துறை துணைத்தலைவர் முனைவர்.Z.ஆனி விஜயா இ.கா.ப (திருச்சி சரகம்) அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அரியலூரில் பொதுமக்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் மற்றும் அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. மதன் மற்றும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து 09.10.2020 அன்று கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
முக கவசங்களை அணியவும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வதும், கை கழுவும் திரவம் அடிக்கடி பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார்கள். மேலும் இருசக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் பயணம் செய்தவர்களுக்கு முழு கவசம் அளித்து இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரியலூர் மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற உறுதுணையாக இருப்போம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் பொதுமக்கள் அனைவருக்கும் உறுதிமொழி ஏற்றனர்.