பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் மலைப்ப நகரின் அருகே உள்ள ராமலிங்க நகரில் சுமார் 35 கலை கூத்தாடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பெரம்பலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்கள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மக்களை மகிழ்விக்கும் கரகாட்டம், தப்பாட்டம் போன்ற நடனங்களை அரங்கேற்றி பிழைப்பை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழக அரசின் 144 ஊரடங்கு உத்தரவின் காரணமாக தங்களது வாழ்வாதாரம் இழந்து உணவிற்கு வழியின்றி இருப்பதாக கிடைத்த தகவலின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள் மேற்படி ராமலிங்க நகரில் வசிக்கும் 35 கலை கூத்தாடி இன மக்களுக்கு ஒரு மாதத்திற்கு உணவிற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினார்.
துணைக் காவல் கண்காணிப்பாளரின் மேற்படி செயலினை அறிந்த பெரம்பலூர் மாவட்ட மக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை