சிவகங்கை: கோவிலூரில் உள்ள நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் (09.04.2025) அன்று கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவிலூர் ஆதீனம் சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள் மாணவர்களுக்கு ஆசியுரை வழங்கினார். கல்லூரியின் தாளாளர் முனைவர் M. வீரப்பன் தலைமையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் R. சந்திரமோகன் அவர்கள் 2024 2025 ஆம் ஆண்டிற்கான கல்லூரி ஆண்டு அறிக்கையை வாசித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறையின் பேராசிரியர், முனைவர். G. இளங்குமரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தன் சிறப்புரையில் மாணவர்களுக்கு “உங்களிடம் உள்ள திறமைகளை நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் அருகில் இருக்கும் வளங்களை பயன்படுத்தி உங்கள் வாழ்வில் மேன்மேலும் வளர முடியும்” என்றும் கூறினார். முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வணிகவியல் துறையின் தலைவர் பேராசிரியை M. சீதாலட்சுமி வரவேற்புரை வழங்கினார். நிறைவாக கல்லூரியின் கணினியில் துறைத் தலைவர் பேராசிரியை K. கலா நன்றி உரையாற்றினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி