திருவண்ணாமலை : (28.07.2022) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில், பள்ளிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அனுமதி பெறாமல் விடுதிகள் இயங்கக்கூடாது எனவும் அவ்வாறு அனுமதி பெறாமல் இருந்தால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அனைத்து விடுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் எனவும், மாணவர்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், விடுதிகளில் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும் எனவும், மேலும் மாணவர்களிடையேபோதை பொருட்களை தவிர்ப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்