கிருஷ்ணகிரி : கர்நாடக காவிரி நீர் திறப்பு உத்தரவை கண்டித்து இன்று கர்நாடகவில் 144 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அத்திப்பள்ளி எல்லையில் தமிழ்நாட்டை சேர்ந்த TN பதிவு செய்யப்பட்ட எந்த வாகனத்தையையும் கர்நாடகவிற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. இதனால் கர்நாடகாவிற்கு சென்றால் வாகனங்கள் தாக்கப்படும் என்ற காரணத்தால் முன்னெச்சரிக்கையால் அரசு தெரிவித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ADSP திருவிவேகானந்தன் தலைமையில் 400 க்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் DIG திரு.மதி.ராஜேஸ்வரி அவர்கள், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் தாகூர் அவர்கள், மற்றும் ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாபு பிரசாத் அவர்கள், ஓசூர் பகுதியில் உள்ள கர்நாடக சேர்ந்த அனைத்து எல்லைகளையும் நேரில் சென்று பாதுகாப்பு பணி தீவிரமாக இருக்கிறதா என்று பார்வையிட்டார்கள். இதனால் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழ்நாட்டு எல்லைகளில் காவல்துறையினரால் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் கர்நாடகாவிற்குள் செல்ல வேண்டாம் என்றும் காவல்துறையினர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்