தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் காய்கறி வாகனத்தில் மது கடத்தி வந்து அதை விற்று வருவதாக தொடர்ந்து வந்த புகாரின் பேரில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .தேஷ்முக் சேகர் சஞ்சய் IPS அவர்களின் உத்தரவுபடி கும்பகோணம் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன் தலைமையில் இன்று (4-6-2021) கும்பகோணம் புறவழிச் சாலையில் தனிப்படை போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார், தலைமை காவலர் கதீஸ், தலைமை காவலர் ரமேஷ், தலைமை காவலர் ஜம்புலிங்கம், தலைமை காவலர் சண்முகசுந்தரம், தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள் .
அப்போது அந்த வழியாக வந்த காய்கரி ஏற்றி வந்த ஈச்சர் லாரி ஒன்று நிற்காமல் சென்றதால் அதை விரட்டி பிடித்த தனிப்படை போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்தார்கள் அப்போது அதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 1600 கர்நாடகா மாநில மது பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே அந்த வாகனம் மற்றும் அதில் கடத்தி வந்த கர்நாடக மாநில மதுபாட்டில்கள் 1600 -ம் பறிமுதல் செய்து கடத்தி வந்த முருகையா ,ராஜ்குமார்,காமேஷ் ஆகிய மூன்று பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்-