கரூர் : கரூர் மாவட்டத்தில் 3 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதுக்கு தேர்வாகியுள்ளனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சிலம்பரசன் அவர்கள், தனிப் பிரிவு ஆய்வாளர் திரு. செல்வராஜ் அவர்கள் மற்றும் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மாரிமுத்து ஆகிய அனைவருக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.