கரூர் : கரூர் மாநகரில் , மோட்டார் சைக்கிள்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, வந்த தகவலின்பேரில் உணவு கடத்தல் பிரிவு, காவல் துறையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்தின்பேரில், காவல் துறையினர், பின் தொடர்ந்து சென்றனர். அந்த மோட்டார் சைக்கிள் கரூர் முத்து நகர் பகுதியில், ஜவுளி துணி உற்பத்தி செய்யும், நிறுவன பெயர் பலகை மாட்டப்பட்டுள்ள கடைக்குள் சென்றது. இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை, தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த மோட்டார் சைக்கிளில், ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த கடையில் காவல் துறையினர், சோதனை செய்தனர். அப்போது அங்கு 63, மூட்டைகளில் இருந்த சுமார் 1½ டன் ரேஷன் அரிசையை, பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரிசி கடத்தியதாக மணிகண்டன் (28), என்பவரைகாவல் துறையினர், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வட்டார வழங்கல் அலுவலர் மகேந்திரன், உணவு கடத்தல், தடுப்பு பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார், கொண்ட பறக்கும் படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது, குறிப்பிடத்தக்கது.















